Monday, February 2, 2026
HomeMain NewsSri Lankaஹஷிஷ் போதைப்பொருளுடன் வெளிநாட்டுப் பெண் கைது!

ஹஷிஷ் போதைப்பொருளுடன் வெளிநாட்டுப் பெண் கைது!

சுமார் 36 கோடி ரூபாய் மதிப்புள்ள ஹஷிஷ் போதைப்பொருளுடன் வெளிநாட்டுப் பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த பெண் கனடாவின் டொராண்டோவிலிருந்து ஐக்கிய அரபு இராச்சியத்தின் அபுதாபி நகரிலிருந்து நேற்று (15) இரவு இலங்கைக்கு வந்தபோது சுங்க போதைப்பொருள் கட்டுப்பாட்டுப் பிரிவின் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைதான பெண்ணை மேலதிக விசாரணைக்காக, கட்டுநாயக்க விமான நிலைய காவல்துறை போதைப்பொருள் பணியக அதிகாரிகளிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று சுங்க போதைப்பொருள் கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது.

 

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular