Tuesday, February 3, 2026
HomeMain NewsSri Lankaசர்வதேச தாய்மொழி தினம் இன்று!

சர்வதேச தாய்மொழி தினம் இன்று!

கருவில் இருக்கும்போதே தாய்மொழிச் சொற்களை குழந்தை செவிமடுக்க ஆரம்பித்து விடுகின்றன.

கருவில் இருக்கும் போதே 10 ஆயிரம் கலைச்சொற்களை குழந்தை உள்வாங்கி வைத்துள்ளது என்று மருத்துவ வல்லுனர்கள் சொல்கிறார்கள்.

இந்த நிலையில் எண்ணம், படைப்பாற்றல் தாய்மொழி வழியாகவே நடக்கிறது.

உலகெங்கும் அடையாளம் காணப்பட்டிருக்கும் ஏறக்குறைய 6,000 மொழிகளிலும், 43 விழுக்காட்டு மொழிகள் அழியும் நிலையிலுள்ளன.

இந்த மொழிகளில் பலவற்றைப் பேசுவோரின் எண்ணிக்கை வெறும் 1,000க்குள்ளாகவே இருக்கும்.

நூற்றுக்கும் குறைவான மொழிகளே தற்போதைய டிஜிட்டல் உலகில் பயன்படுத்தப்படுகின்றன.

உலகின் மூத்த மொழிகளில் ஒன்று செம்மொழியான தமிழ் மொழி போன்ற பழமைமிக்க மொழிகள் மட்டுமல்லாது உலகம் முழுவதும் பேசப்பட்டு வரும் மொழிகளுக்காக வருடங்தோறும் சர்வதேச தாய்மொழி தினம் ‘பெப்ரவரி 21-ஆம் திகதி கொண்டாடப்படுகின்றது.

மொழியியல் பன்முகத்தன்மையை மேம்படுத்துவோம் என்ற தொனிப்பொருளின் கீழ் இந்த வருடம் சர்வதேச தாய்மொழி தினம் அனுஷ்டிக்கப்படுகின்றது.

வங்கதேச தலைநகர் டாக்காவில் கடந்த 1952ஆம் ஆண்டு மொழிக்காக நடந்த போராட்டத்தில் கொல்லப்பட்டவர்களின் நினைவாக வருடந்தோறும் பெப்ரவரி 21ஆம் திகதியை உலக தாய்மொழி தினமாக கடைபிடிக்க வேண்டும் என்ற தீர்மானத்தை ரஃபீக்குல் இஸ்லாம் எனும் வங்கதேச அறிஞர் ஜனவரி 1998-இல் முன்மொழிந்தார்.

அவரது கோரிக்கையை பரிசீலித்த யுனெஸ்கோ அமைப்பு 199ஆம் ஆண்டு அந்த தீர்மானத்தை அங்கீகரித்தது.

இதையடுத்து கடந்த 2000 வாக்கிலிருந்து உலக தாய்மொழிகள் தினம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

2032ஆம் ஆண்டளவில் 80 சதவீதத்திற்கும் அதிகமான மக்கள் மொழியில் தேர்ச்சி பெற்று இருப்பதை உறுதி செய்ய வேண்டும் என்பதே இன்றைய நாளின் நோக்கம்.

அந்த பெருமிதத்தின் ஒரு வெளிப்பாடாகத்தான் மொழி ‘தாய்மொழி’ அமைந்துள்ளது.

அப்படிபட்ட மொழிக்காக உயிர்த்தியாகம் செய்த சில இளைஞர்களை நினைவுகூரும் நாளே தாய்மொழி தினமாக மாறியது.

மொழி மனித இனத்தின் நாகரீக பரிணாமத்தின் ஆரம்பப் படிநிலைகளில் ஒன்றான மொழி தகவல் தொடர்பிற்கு பயன்படுத்தப்படும் கருவியாக மாத்திரமின்றி ஒரு சமூகத்தின் பண்பாட்டுடனும் , கலாசாரத்துடனும் ஒன்றிணைந்து சமூகத்தின் பண்பாட்டை வெளிப்படுத்தும் சாதனமாகவே மொழி திகழ்கின்றது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular