Monday, February 2, 2026
HomeMain NewsSri Lanka133 தேர்தல் முறைப்பாடுகளுக்கு தீர்வு

133 தேர்தல் முறைப்பாடுகளுக்கு தீர்வு

இதுவரை 180 தேர்தல் முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளதாக தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இந்த முறைப்பாடுகள் கடந்த 20 ஆம் திகதி முதல் 28 ஆம் திகதி வரை பெறப்பட்டதாக தேர்தல் ஆணைக்குழு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

அதன்படி, வன்முறைச் செயல்கள் தொடர்பாக ஒரு முறைப்பாடும், தேர்தல் விதி மீறல்கள் தொடர்பாக 179 முறைப்பாடுகளும் தேர்தல் ஆணைக்குழுவிற்கு கிடைத்துள்ளன.

பெறப்பட்ட 180 முறைப்பாடுகளில் இதுவரை 133 முறைப்பாடுகளுக்கு தீர்வு காணப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

மேலும் 47 முறைப்பாடுகளை தீர்க்கும் பணியில் ஈடுபட்டுள்ளதாகவும் ஆணைக்குழு தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular