Tuesday, February 3, 2026
HomeMain NewsOther Countryஇந்தியா தாக்குதலை நிறுத்தினால் நாமும் நிறுத்துவோம்

இந்தியா தாக்குதலை நிறுத்தினால் நாமும் நிறுத்துவோம்

இந்தியா தாக்குதல்களை நிறுத்துமாயின் தாமும் எதிர்த் தாக்குதல்களை நிறுத்துவதற்குத் தயாராகவுள்ளதாகப் பாகிஸ்தானின் பிரதமர், வெளிவிவகார அமைச்சர் இஷாக் தார் தெரிவித்துள்ளார்.

அமெரிக்க வெளிவிவகார அமைச்சர் மார்க் ரூபியோ உடனான தொலைபேசி கலந்துரையாடலின் போது பாகிஸ்தானின் வெளிவிவகார அமைச்சர் இஷாக் தார் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை இரு நாடுகளும், தற்போது உள்ள பதற்றமான சூழ்நிலையைக் குறைப்பதற்கான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என அமெரிக்க வெளிவிவகார அமைச்சர் மார்க் ரூபியோ வலியுறுத்தியுள்ளார்.

இதேவேளை மார்க் ரூபியோ, இந்தியத் தரப்புடனும் கலந்துரையாடலில் ஈடுபட்டதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular