Monday, February 2, 2026
HomeMain NewsOther Countryதலைமுடியால் புது உலக சாதனை ! வைரல் ஆகும் பெண்

தலைமுடியால் புது உலக சாதனை ! வைரல் ஆகும் பெண்

உலக சாதனை படைப்பதற்காக தலை முடியையே ஆயுதமாக பயன்படுத்திய பெண்ணின் செயல் உலகளவில் வைரல் ஆகியுள்ளது

தலைமுடியில் தொங்குவதில் நிபுணத்துவம் பெற்ற ஒரு தொழில்முறை சர்க்கஸ் கலைஞர், 25 நிமிடங்கள் 11.3 வினாடிகள் தனது தலைமுடியால் தொங்கி புது சாதனை படைத்துள்ளார்.

39 வயதான லீலா நூன், என்ற பெண் கலிபோர்னியாவில் உள்ள ரெட்வுட் தேசிய மற்றும் மாநில பூங்காக்களில் உள்ள ஒரு அழகிய இடத்தில் தலைமுடியால் கம்பிகளின் ஊடாக 25 நிமிடம் தொங்கி இந்த சாதனையை படைத்துள்ளார்

முன்னதாக 2011 ஆம் ஆண்டில் அவுஸ்திரேலியரான சுதாகரன் சிவஞானதுரை என்பவர் இந்த சாதனையை படைத்திருந்தார்

அவர் 23 நிமிடங்கள் 19 வினாடிகள் தலைமுடியால் தொங்கி சாதனை படைத்திருந்த நிலையில் தற்போது அவருடைய சாதனையை லீலா நூன் முறியடித்துள்ளார்.

இந்த சாதனையை முறியடிக்க அவருக்கு இரண்டு வருட பயிற்சி தேவைப்பட்டதாகவும்
மனதின் சக்தியால் என்ன வேண்டுமானாலும் செய்ய முடியும் என்பதை நிரூபிப்பதே சாதனை முயற்சியின் குறிக்கோள் என்றும் அவர் கூறியுள்ளார்

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular