Monday, February 2, 2026
HomeSportsபிரெஞ்சு ஓபன் டென்னிஸ்: தகுதி சுற்றில் இந்தியாவின் சுமித் நாகல் தோல்வி

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ்: தகுதி சுற்றில் இந்தியாவின் சுமித் நாகல் தோல்வி

‘கிராண்ட்ஸ்லாம்’ அந்தஸ்து பெற்ற பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டி வருகிற 25 ஆம் திகதி பாரீசில் தொடங்குகிறது.

இதையொட்டி தற்போது தகுதி சுற்று ஆட்டங்கள் தொடங்கி நடந்து வருகிறது.

இதன் முதலாவது சுற்றில் உலக தரவரிசையில் 170-வது இடம் வகிக்கும் இந்திய வீரர் சுமித் நாகல் அமெரிக்காவின் மிட்செல் குருகரை எளிதில் வீழ்த்தி அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.

இன்னும் 2 வெற்றி பெற்றால் அவர் பிரதான சுற்றை எட்ட முடியும் என்ற நிலையில் இன்று ஜூரிச் ரோடியானோவை (ஆஸ்திரியா) எதிர் கொண்டார்.

இந்த ஆட்டத்தில் 2-6, 4-6 என்ற கணக்கில் சுமித் நாகல் தோல்வியடைந்தார்.

 

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular