பிரான்ஸ் ஜனாதிபதி வியட்நாம் விஜயம்

தென்கிழக்கு ஆசிய சுற்றுப்பயணத்தின் முதல் கட்டமாக பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் வியட்நாம் சென்றுள்ளார்.

இந்தோனேசியா மற்றும் சிங்கப்பூர் உள்ளிட்ட தனது ஆறு நாள் பயணத்தின் போது, ​​”அமெரிக்காவிற்கும் சீனாவிற்கும் இடையில் சிக்கியுள்ள” ஆசிய நாடுகளின் இறையாண்மைக்காவும் மக்ரோன் குரல் கொடுப்பார் என்று ஜனாதிபதியின் உதவியாளர் ஒருவர் சுற்றுப்பயணத்திற்கு முந்தைய மாநாட்டின் போது தெரிவித்தார்.

மே 26 அன்று தலைநகர் ஹனோயில் வியட்நாமின் உயர்மட்டத் தலைவர்களையும், மே 27 அன்று முக்கிய எரிசக்தித் துறை அமைச்சர்களையும் பிரான்ஸ் ஜனாதிபதி சந்திக்க உள்ளார்.

ரஷ்யா உள்ளிட்ட பிற நாடுகளும் ஒப்பந்தங்களுக்கான போட்டியில் இருந்தாலும், இந்த வகையான எரிசக்தியை ஏற்றுக்கொள்ள ஆர்வமாக உள்ள வியட்நாம் மற்றும் இந்தோனேசியாவில் சிவில் அணுசக்தியில் பிரான்சின் நிபுணத்துவத்தை வெளிப்படுத்த மக்ரோன் நம்புகிறார்.

“நூற்றாண்டின் முக்கிய சவால்களை எங்கள் கூட்டாளர்களுடன் இணைந்து மட்டுமே எதிர்கொள்ள முடியும்” என்று மக்ரோன் ஹனோயில் தரையிறங்கிய பிறகு சமூக ஊடகங்களில் பதிவிட்டுள்ளார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Are you human? Please solve:Captcha


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles