பிரித்தானியப் பெண்ணொருவர் வெளிநாடு ஒன்றிலிருந்து புறப்படும் நேரத்தில், விமான நிலையத்தில் அவரது சூட்கேஸ்களை அதிகாரிகள் சோதனையிட்டனர்.
பிரித்தானிய குடிமகளான பிரௌன் (Browne-Frater Chyna Jada, 23), கானா நாட்டிலிருந்து லண்டன் புறப்பட இருந்த நேரத்தில், Accra நகர விமான நிலையத்தில் அதிகாரிகள் அவரது சூட்கேஸ்களை சோதனையிட்டார்கள்.
அப்போது அவரது சூட்கேஸ்களில் 32 பொட்டலங்களில் போதைப்பொருட்கள் மறைந்துவைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
அது 17.72 கிலோ கஞ்சா என்னும் போதைப்பொருள் என்பது பின்னர் தெரியவந்தது. அதன் மதிப்பு 172,000 பவுண்டுகள் ஆகும்.
கைது செய்யப்பட்ட பிரௌன் Accra நகர நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டார்.
