Monday, February 2, 2026
HomeMain NewsIndiaவெள்ளத்தில் மூழ்கிய மும்பை நகரம்

வெள்ளத்தில் மூழ்கிய மும்பை நகரம்

ஒருநாள் பெய்த மழையிலேயே இந்தியாவின் மும்பை நகரம் நேற்று(26) வெள்ளத்தில் மூழ்கியது. மும்பையில் பருவமழை முன்கூட்டியே தொடங்கியது. நகரின் பல இடங்களில் வெள்ளநீர் சூழ்ந்ததால் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

வீடுகளுக்கு உள்ளேயும் வெள்ளநீர் புகுந்ததால் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். 35 ஆண்டு கால வரலாற்றில் இல்லாத அளவிற்கு பருவமழை அங்கு முன்கூட்டியே தொடங்கி உள்ளது.

இதேவேளை நகரின் பல்வேறு மாவட்டங்களுக்கு வானிலை எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

அங்கு பலத்த காற்றுடன் கடலில் பெரும் இராட்சத அலைகள் ஏற்படலாம் என்றும் வானிலை அவதான நிலையம் எச்சரித்துள்ளது.

ஒரு நாள் மழையில் ரயில்நிலையம், பஸ் நிலையங்கள், அரசு வைத்தியசாலைகள் என பல இடங்களில் மழை நீர் சூழ்ந்தது. முக்கிய வீதிகளில் மழைநீர் வெள்ளப்பெருக்காக ஓடியது. சில இடங்களில் வாகனங்கள் மிதந்தன.நகரின் சில இடங்கள் குளம்போல் மாறியிருந்தன.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular