Tuesday, February 3, 2026
HomeMain NewsOther Countryசீனாவில் ஜன்னலை கதவு என தவறாக நினைத்த மூதாட்டிக்கு காத்திருந்த அதிர்ச்சி

சீனாவில் ஜன்னலை கதவு என தவறாக நினைத்த மூதாட்டிக்கு காத்திருந்த அதிர்ச்சி

சீனாவில் ஜன்னலை கதவு என தவறாக நினைத்த 102 வயது மூதாட்டி 3ஆவது மாடியிலிருந்து விழுந்துள்ளார்.

எனினும் அதிஷ்டவசமாக வழிப்போக்கர்கள் அவரை தாங்கிப் பிடித்துக் காப்பாற்றியுள்ளனர்.

ஹெனான் மாநிலத்தின் சுமாடியான் நகரில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

கீழே விழுந்த மூதாட்டி ஆபத்தான நிலையில் தொங்கிக்கொண்டிருந்ததாக தெரியவந்துள்ளது.

மக்கள் அவசரச் சேவையைத் தொடர்புகொண்டனர். எனினும் மூதாட்டி கீழே விழும் அபாயம் காணப்பட்டுள்ளது. அருகில் இருந்த கடைக்காரர் ஒருவர் உடனே தமது கடையில் இருந்த விரிப்பைக் கொண்டு வந்துள்ளார்.

சுமார் 12 பேர் அந்த விரிப்பைப் பிடித்துக்கொண்டனர். மூதாட்டி பிடியை இழந்து கீழே விழுந்தார். வழிப்போக்கர்கள் அவரைப் பாதுகாப்பாக விரிப்பில் பிடித்தனர்.

மூதாட்டியின் குடும்பத்தார் அவரை உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர்.

அவருக்குச் சிறுகாயங்கள் ஏற்பட்டன. அவர் அன்று மதியமே மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பினார்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular