Monday, February 2, 2026
HomeMain NewsOther Countryஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

ஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

ஜப்பானில் இன்று சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. அந்நாட்டின் ஹோகைடோ தீவில் குஷிரா நகரில் இருந்து 40 கிலோமீட்டர் தூரத்தில் 17 கிலோமீட்டர் ஆழத்தை மையமாக கொண்டு நிலநடுக்கம் ஏற்பட்டது. இன்று அதிகாலை ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 6.0 ஆக பதிவானது. சக்திவாய்ந்த இந்த நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் அதிர்ந்தன.

ஆனாலும், இந்த நிலநடுக்கத்தில் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்த விவரம் இதுவரை வெளியாகவில்லை. சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை.

அதேவேளை, ஹோகைடோ தீவில் நேற்றும் நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவில் 6.1 ஆக அந்த நிலநடுக்கம் பதிவாகியிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular