Tuesday, February 3, 2026
HomeMain NewsOther Countryஅழகுசாதன பொருட்களை சாப்பிட்டு இன்ஸ்டா பிரபலம் மரணம்

அழகுசாதன பொருட்களை சாப்பிட்டு இன்ஸ்டா பிரபலம் மரணம்

அழகு சாதனப் பொருட்களை உணவாக சாப்பிட்டு அதை காணொளிகளாக எடுத்து இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து பிரபலமாகிய தாய்வான் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

அவர் தனது இன்ஸ்டாகிராம் கணக்கில் லிப்ஸ்டிக், ப்ளஷ் மற்றும் பிற ஒப்பனைப் பொருட்களை சாப்பிடும் காணொளிகளை தொடர்ந்து பகிர்ந்து வந்தார்.

குவா பியூட்டி’ என்ற அவரது இன்ஸ்டாகிராம் கணக்கில் 12,000 க்கும் மேற்பட்ட பின்தொடர்பவர்கள் இருந்தனர்.

ஆபத்தான இரசாயனங்கள் கொண்ட அழகுசாதனப் பொருட்களை உட்கொண்டதற்காக அவர் மீது சமூக ஊடகங்களில் நிறைய விமர்சனங்கள் எழுந்தன.

இந்நிலையில் அவரது மரணச் செய்தியை குடும்பத்தினரே சமூக ஊடகங்களில் பகிர்ந்து கொண்டனர்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular