ஜேர்மனியில் நடைபெற்று வருகின்ற நேஷன்ஸ் லீக் கால்பந்து தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில் இந்த தொடரில் இன்று நடைபெற்ற அரையிறுதி போட்டியில் போர்த்துக்கல் – ஜேர்மனி அணிகள் மோதின.
விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த போட்டியில் ஜேர்மனி முதல் கோல் அடித்து முன்னிலை பெற்றது. இதனையடுத்து போர்த்துக்கல் வீரர் பிரான்சிஸ்கோ பதில் கோல் அடித்து சமனுக்கு கொண்டு வந்தார்.
பின்னர் போட்டியின் முக்கியமான தருணத்தில் போர்த்துக்கல் நட்சத்திர வீரர் ரொனால்டோ கோல் அடித்து அணிக்கு வெற்றியை தேடி கொடுத்தார்.
முழு நேர போட்டி முடிவில் போர்த்துக்கல் 2-1 என்ற கோல் கணக்கில் ஜேர்மனியை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளது.
இறுதிப்போட்டியில் ஸ்பெயின் அல்லது பிரான்ஸ் அணியுடன் போர்த்துக்கல் மோதவுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.
