ஐரோப்பிய நாடுகளில் சாரதி அனுமதி பத்திரங்களில் ஏற்படவுள்ள புதிய மாற்றம்

ஐரோப்பிய நாடுகளின் சாரதி அனுமதிப்பத்திரங்களில் பாரிய மாற்றங்களை அறிமுகப்படுத்த ஐரோப்பிய ஒன்றியம் தீர்மானித்துள்ளது.

2030 ஆம் ஆண்டுக்குள், அனைத்து உறுப்பு நாடுகளிலும் வீதி போக்குவரத்தை பாதுகாப்பானதாக மாற்றும் நோக்கிலேயே இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

டிஜிட்டல் சாரதி அனுமதிப்பத்திரத்தை அறிமுகப்படுத்துவது குறிப்பிடத்தக்க ஒரு மாற்றமாகும்.

இது அனைத்து ஐரோப்பிய ஒன்றிய நாடுகளிலும் அறிமுகப்படுத்தப்படும் என்ற போதிலும். பழைய பிளாஸ்டிக் அட்டை பயன்பாடு இரத்து செய்யப்படாது.

எதிர்வரும் ஆண்டு முதல், அனைத்து கார் மற்றும் மோட்டார் சைக்கிள் சாரதி அனுமதிப் பத்திரங்களும் ஆண்டுகள் நிலையான செல்லுபடியாகும் காலத்தைக் கொண்டிருக்கும்.

எனினும், சாரதி அனுமதிப்பத்திரம், அடையாள அட்டையாகப் பயன்படுத்தப்பட்டால், அது 10 ஆண்டுகளுக்கு மட்டுமே செல்லுபடியாகும்.

ட்ரக் மற்றும் பேருந்து உரிமங்கள் ஐந்து ஆண்டுகளுக்கு செல்லுபடியாகும்.

அத்துடன், வாகனம் ஓட்ட விரும்பும் 70 வயதுக்கு மேற்பட்டவர்கள் கட்டாயமாக சுகாதார பரிசோதனை செய்ய வேண்டும் என்று கோரியிருந்த போதிலும், ஐரோப்பிய ஒன்றிய நாடாளுமன்றம் இதற்கான சீரான எந்த விதியையும் அங்கீகரிக்கவில்லை.

இதேவேளை, முதன்முதலாக சாரதி அனுமதி பத்திரத்திற்கு விண்ணப்பிப்பவர்களுக்கு சுகாதார பரிசோதனை கட்டாயமாகலாம்.

மற்றொரு முக்கிய மாற்றம், புதிய ஓட்டுநர்களுக்கு சீரான தகுதிகாண் காலத்தை அறிமுகப்படுத்துவதாகும்.

இந்தக் காலம் குறைந்தது இரண்டு ஆண்டுகள் கடுமையான விதிகளுடன் நீடிக்கும்.

அத்துடன், குடிபோதையில் வாகனம் ஓட்டுவது அல்லது சீட் பெல்ட் அணியாமல் இருப்பது போன்ற சட்டங்களை மீறும் புதிய ஓட்டுநர்கள் கடுமையான தண்டனைகளை எதிர்கொள்ள நேரிடும்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Are you human? Please solve:Captcha


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles