Monday, February 2, 2026
HomeMain NewsCanadaகனடாவில் குடியிருமை பெற காத்திருக்கும் வெளிநாட்டினருக்கு மகிழ்ச்சியான செய்தி!

கனடாவில் குடியிருமை பெற காத்திருக்கும் வெளிநாட்டினருக்கு மகிழ்ச்சியான செய்தி!

கனடா மக்கள், அந்நாட்டை தவிர வேறு நாடுகளில் குழந்தையை பெற்றால், முதல் தலைமுறை குழந்தைக்கு மட்டும் குடியுரிமை வழங்கப்பட்டு வந்தது. இரண்டாவது தலைமுறை குழந்தைக்கு குடியுரிமை கிடைக்காமல் இருந்தது.

இந்நிலையில் அனைத்து தலைமுறை குழந்தைகளுக்கும் குடியுரிமை கிடைக்கும் வகையில் தற்போது அந்நாட்டு அரசு, சட்டத்தில் திருத்தம் மேற்கொண்டு வருகிறது. இதற்கான மசோதா தற்போது நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது.

இந்த மசோதாவின்படி இனி எத்தனை தலைமுறை வேண்டுமானாலும் கனடாவின் குடியுரிமையை பெற்றுக்கொள்ளலாம்.

இந்த சட்டத்திருத்தம் நேற்று அந்நாட்டு நாடாளுமன்றத்தில் முன்மொழியப்பட்டிருக்கிறது. இந்த சட்டத்திருத்தத்திற்கு இந்தியர்கள் உட்பட பல்வேறு வெளிநாட்டை சேர்ந்த மக்களும் வரவேற்பு தெரிவித்திருக்கின்றனர்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular