Tuesday, February 3, 2026
HomeSportsரோஹித் – கோலி வேண்டாம்! 4 பேர் RCB அணிக்கு போதும் – விஜய் மல்லையா...

ரோஹித் – கோலி வேண்டாம்! 4 பேர் RCB அணிக்கு போதும் – விஜய் மல்லையா போடும் திட்டம்

நடப்பாண்டு ஐபிஎல் தொடர் கோலாகலமாக தொடங்கி பெங்களூர் அணியின் வெற்றியுடன் நிறைவடைந்தது. இந்த சீசனை தொடர்ந்து அடுத்ததாக அடுத்த சீசன் எப்போது வரும் என கிரிக்கெட் ரசிகர்கள் காத்திருக்க தொடங்கியுள்ளனர்.

இப்படியான சூழலில் பெங்களூர் அணியின் முன்னாள் உரிமையாளர் விஜய் மல்லையா பெங்களூர் அணிக்கு விராட்- ரோஹித் கூட வேண்டாம் என்பது போல மற்ற 4 இந்திய வீரர்களை தேர்வு செய்துள்ளார்.

சமீபத்தில் தனியார் ஊடகம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் கலந்துகொண்ட விஜய் மல்லையாவிடம் நீங்கள் இந்த சமயம் பெங்களூர் அணியின் உரிமையாளராக இருந்தால் எந்த இந்திய வீரர்களை பெங்களூர் அணியில் எடுத்துக்கொள்வீர்கள் என கேட்கப்பட்டது. அந்த கேள்விக்கு பதில் அளித்த விஜய் மல்லையா எனக்கு 4 வீரர்கள் வேண்டும் என்னுடைய கனவுகள் என்றால் அந்த 4 வீரர்கள் தான்.

அவர்கள் யாரெல்லாம் என்றால் ஜஸ்பிரித் பும்ரா, சூர்யகுமார் யாதவ், ரிஷப் பந்த் மற்றும் கேஎல் ராகுல் ஆகியோரை தான் தேர்வு செய்வேன் என கூறினார். இவர்களை தேர்வு செய்த காரணத்தையும் அவர் பேசினார். கே.எல்.ராகுலை பொறுத்தவரையில் அவர் ஏற்கனவே பெங்களூர் அணிக்காக நிறைய போட்டிகள் விளையாடியிருக்கிறார். எனவே, அவருக்கு பெங்களூர் என்றால் பிடிக்கும். அதைப்போலவே பண்ட் பல ஆண்டுகளாக டெல்லி அணிக்காக விளையாடி தன்னுடைய சிறந்த ஆட்டங்களை கொடுத்திருக்கிறார்.

அதைப்போல பும்ரா ஒரு சிறந்த பந்துவீச்சாளர் மும்பை அணியின் வெற்றிகளுக்கு அவரும் மிகப்பெரிய காரணமே. எனவே, அவரை போல வீரர் அணியில் இருந்தால் நன்றாக இருக்கும். இவர்கள் இருந்தாலே எனக்கு போதும் நான் வேறு எந்த வீரர்களையும் தேடமாட்டேன். இவர்கள் ஒரே அணியில் இருந்தால் கோப்பையை வெல்வது கூட சுலபம் தான்” எனவும் விஜய் மல்லையா தெரிவித்தார்.

இத்தனை வருடங்கள் பெங்களூர் அணிக்காக விளையாடிய விராட் கோலி பெயரை விஜய் மல்லையா கூறவில்லை..அதைப்போல மும்பையில் இரண்டு இந்திய வீரர்களை தேர்வு செய்தாலும் 5 முறை கோப்பை கேப்டனாக இருந்து வென்று கொடுத்த ரோஹித் ஷர்மாவின் பெயரையும் சொல்லவில்லை என்பதால் ரசிகர்கள் சற்று அதிருப்தியில் உள்ளனர்.

மேலும், 2008 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடங்கப்பட்டபோது, ​​யுனைடெட் ஸ்பிரிட்ஸ் தலைவராக இருந்த விஜய் மல்லையா, ஆர்சிபி அணியை சொந்தமாக்கினார். அவர் அந்த அணியை 476 கோடி ரூபாய்க்கு வாங்கினார், அந்த நேரத்தில் மும்பை இந்தியன்ஸ் அணிக்குப் பிறகு இரண்டாவது மிக விலையுயர்ந்த அணியாகவும் பெங்களூர் மாறியது. மல்லையா அணியின் உரிமையாளராக இருந்த சமயத்தில் யுனைடெட் ஸ்பிரிட்ஸின் பிரபலமான பிராண்டுகளான ராயல் சேலஞ்ச், மெக்டோவலின் நம்பர் 1 மற்றும் கிங்ஃபிஷர் ஆகியவை ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூருவின் முக்கிய ஸ்பான்சர்களாகவும் இருந்தன.

அதன்பின், சட்ட சிக்கல்கள் காரணமாக மல்லையா 2016 இல் யுனைடெட் ஸ்பிரிட்ஸிலிருந்து விலகிய பிறகு, அந்த உரிமை யுனைடெட் ஸ்பிரிட்ஸ் லிமிடெட்டின் முழு கட்டுப்பாட்டின் கீழ் வந்தது, இப்போது டியாஜியோ பெங்களூர் அணியை நிர்வகித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular