Monday, February 2, 2026
HomeMain NewsSri Lankaநாட்டின் பல பகுதிகளில் இன்றும் கடும் மழை...!

நாட்டின் பல பகுதிகளில் இன்றும் கடும் மழை…!

நாட்டின் பல பகுதிகளில் இன்று மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடுமென வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

அந்தவகையில், மேல், சப்ரகமுவ, வடமேல் மாகாணங்களிலும், கண்டி, நுவரெலியா, காலி, மாத்தறை மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யக்கூடும்

மேலும், வடக்கு, ஊவா மாகாணங்களிலும், அம்பாறை, மட்டக்களப்பு மாவட்டங்களிலும் மாலை அல்லது இரவு வேளைகளில் சில இடங்களில், மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுப் பகுதிகளிலும், வடக்கு, வடமத்திய, வடமேல், தென் மாகாணங்களிலும், திருகோணமலை மாவட்டத்திலும் அவ்வப்போது மணிக்கு 30-40 கிலோமீற்றர் வேகத்தில் காற்று வீசக்கூடும்.

இதேவேளை, இடியுடன் கூடிய மழை பெய்யும் சந்தர்ப்பங்களில் ஏற்படும் அனர்த்தங்களைக் குறைப்பதற்குத் தேவையான பாதுகாப்பு முன்னாயத்த நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு வளிமண்டலவியல் திணைக்களம் பொது மக்களை அறிவுறுத்தியுள்ளது.

இதற்கிடையில், ஜூன் 10ஆம் திகதி முதல் நாட்டின் தென்மேற்கு பகுதியில் மழை நிலைமை அதிகரிக்கவும், நாட்டின் ஊடாக மற்றும் சுற்றியுள்ள கடற்பரப்புகளில் அவ்வப்போது பலத்த காற்று வீசவும் வாய்ப்புள்ளதாக தெரிவிக்கின்றது.

எனவே, இது தொடர்பாக வளிமண்டலவியல் திணைக்களம், வெளியிடும் அடுத்தடுத்த முன்னிறிவித்தல்களை கவனமாக பின்பற்றுமாறு பொதுமக்களை அந்த திணைக்களம் கோரியுள்ளது.

 

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular