ரஷ்யாவும், உக்ரைனும் இன்று பணயக் கைதிகளைப் பரிமாறிக் கொண்டதாக ரோய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
அதற்கமைய 25 வயதிற்கு உட்பட்ட கைதிகளை இரு நாடுகளும் பரிமாறிக் கொண்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
துருக்கிய நகரான இஸ்தான்புல்லில் கடந்த 2 ஆம் திகதி இரு நாட்டுப் பிரதிநிதிகளுக்கும் இடையே இடம்பெற்ற நேரடிப் பேச்சுவார்த்தைகளை அடுத்து இது சாத்தியமாகியுள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
உக்ரேனுக்கு எதிராக ரஷ்யா ஆக்கிரமிப்பு யுத்தத்தை ஆரம்பித்ததன் பின்னர், மேற்கொள்ளப்படும் திட்டமிடப்பட்ட கைதிகள் பரிமாற்ற தொடரின் முதல்படி என இது விபரிக்கப்பட்டுள்ளது.
இஸ்தான்புல் உடன்படிக்கைக்கு அமைய, இரு தரப்பினரையும் சேர்ந்த 1,200 பணயக் கைதிகளை பரிமாற்றவும், யுத்தத்தின் போது மரணமானவர்களின் உடலங்களைக் கையளிக்கவும் ஒப்பந்தத்தில் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும், ரஷ்யா மற்றும் உக்ரேனுக்கு இடையேயான யுத்தத்தினை முடிவிற்குக் கொண்டு வரும் செயல்பாடு, தற்போது முடிவுக்கு வரும் சாத்தியம் இல்லை என போரியல் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
