Monday, February 2, 2026
HomeMain NewsSri Lankaகுற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முன்னிலையாகுமாறு ரணிலுக்கு அழைப்பு..!

குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முன்னிலையாகுமாறு ரணிலுக்கு அழைப்பு..!

எதிர்வரும் புதன்கிழமை குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முன்னிலையாகுமாறு, முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

மருந்து இறக்குமதி தொடர்பாக, முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் அளித்த முறைப்பாடு தொடர்பில் வாக்குமூலம் பெறுவதற்காக அவருக்கு இந்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

முந்தைய அரசாங்கத்தின் பல அமைச்சர்கள் ஏற்கனவே இந்த முறைப்பாடு தொடர்பாகக் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் தங்களது வாக்குமூலங்களை வழங்கியுள்ளனர்.

இந்தநிலையில், அமைச்சரவையின் கூட்டுப் பொறுப்பு குறித்து, முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் வாக்குமூலம் பெறப்படவுள்ளதாகக் குற்றப் புலனாய்வுத் திணைக்கள தகவல்கள் தெரிவிக்கின்றன.

 

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular