Monday, February 2, 2026
HomeMain NewsIndiaஇந்​திய விமானப் படைக்​காக ரூ.10,000 கோடி​யில் 3 அதிவீன உளவு விமானங்​களை வாங்க முடிவு..!

இந்​திய விமானப் படைக்​காக ரூ.10,000 கோடி​யில் 3 அதிவீன உளவு விமானங்​களை வாங்க முடிவு..!

இந்​திய விமானப் படைக்​காக ரூ.10,000 கோடி​யில் 3 அதிவீன உளவு விமானங்​களை வாங்க இந்திய அரசு முடிவு செய்துள்ளது.

பாகிஸ்தானுக்கு எதிரான ஆபரேஷன் சிந்தூர் நடந்து முடிந்த நிலையில், இந்திய அரசு ஒரு பெரிய முடிவை எடுத்துள்ளது. ரூ.10 ஆயிரம் கோடி செலவில் 3 உயர் தொழில்நுட்ப உளவு விமானங்களை வாங்க பாதுகாப்பு அமைச்சகம் ஒரு திட்டத்தை கொண்டு வர உள்ளது.

இந்த விமானங்கள் எதிரி தரை இலக்குகள் (ரேடார் நிலையங்கள், வான் பாதுகாப்பு பிரிவுகள் மற்றும் பிற மொபைல் பொருள்கள் போன்றவை) மீது துல்லியமான தாக்குதல்களை நடத்தும்.

இந்​திய விமான படை​யில் தற்போது Bombardier Global 5000, Boeing 707-337C, Gulfstream G100 ஆகிய உளவு விமானங்​கள் பயன்​பாட்​டில் உள்​ளன. இதனை தவிர இஸ்​ரேல் தயாரிப்​பான ஹெரோன் ட்ரோன்​கள் மற்​றும் இந்​திய விமானப் படை​யில் இருந்து விடுவிக்​கப்​பட்ட மிக் 25 ரக போர் விமானங்​களும் உள்ளன.

இந்நிலையில் தான் இந்​திய விமானப் படைக்​காக ரூ.10,000 கோடி​யில் 3 அதிவீன உளவு விமானங்​களை வாங்க இந்திய அரசு முடிவு செய்துள்ளது.

இந்த உளவு விமானங்கள் அமெரிக்​கா​வின் போயிங் நிறு​வனம் மற்​றும் கனடா​வின் பாம்​பார்​டியர் நிறு​வனத்​திடம் இருந்து வாங்கப்படவுள்ளது. இதில், உள்​நாட்​டில் தயாரிக்​கப்​பட்ட அதிநவீன ரேடார்​கள், கண்​காணிப்பு கருவி​கள் பொருத்​தப்பட உள்​ளன.

 

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular