Monday, February 2, 2026
HomeMain NewsMiddle Eastகாசாவில் உணவுப்பொருட்கள் தேடிச் சென்ற மக்கள் மீது தாக்குதல்

காசாவில் உணவுப்பொருட்கள் தேடிச் சென்ற மக்கள் மீது தாக்குதல்

காசா மீது இஸ்ரேல் இன்று நடத்திய தாக்குதலில் 36 பலஸ்தீனர்கள் கொல்லப்பட்டுள்ளதுடன் 200இற்கும் அதிகமானவர்கள் காயமடைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.

உதவிப் பொருள்களை எடுக்கச் சென்றவர்கள் மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

கூட்ட நெரிசலைத் தவிர்க்க அதிகாலையில் உதவிப் பொருள்கள் வழங்கப்படும் பகுதிக்கு அவர்கள் சென்றுள்ளனர்.

இதுவரை நிவாரணப் பொருள்கள் உள்ள பகுதிகளுக்குச் சென்றவர்களில் 160க்கும் அதிமானோர் சுட்டுக்கொலை செய்யப்பட்டதாக மனித உரிமைகள் அமைப்புக்கள் தெரிவித்துள்ளன.

இஸ்ரேல், அமெரிக்க ஆதரவிலான காஸா மனிதாபிமான அறநிறுவனம் உதவிப் பொருள்களைத் வழங்கி வருகிறத.

ஒதுக்கப்பட்டுள்ள பாதைகளை மட்டும் பயன்படுத்தி உதவிப் பொருள்களை எடுக்கச் செல்லும்படி அறநிறுவனம் அறிவிறுத்தியுள்ளது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular