Monday, February 2, 2026
HomeMain NewsTechnologyபட்ஜெட் விலையில் புதிய 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்த ஐடெல்

பட்ஜெட் விலையில் புதிய 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்த ஐடெல்

ஐடெல் நிறுவனம் ஜெனோ (Zeno) 5ஜி என்ற புதிய என்ட்ரி லெவல் ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது. குறைந்த விலையில் புதிய ஸ்மார்ட்போன் வாங்க நினைப்பவர்களுக்கு இந்த புதிய மாடல் ஏற்றது.

புதிய ஸ்மார்ட்போன் மீடியாடெக் டிமென்சிட்டி 6300 சிப்செட், 5,000எம்ஏஎச் பேட்டரி, 120ஹெர்ட்ஸ் டிஸ்ப்ளே மற்றும் 50MP பிரதான கேமரா போன்ற அம்சங்களை கொண்டுள்ளது. தற்போது ரூ.10,000க்குக் கீழ் கிடைத்தாலும், இந்த ஆண்டின் தொடக்கத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட ஜெனோ 10 ஸ்மார்ட்போனை விட இது சிறந்த அம்சங்களை கொண்டுள்ளது.

ஐடெல் ஜெனோ 5ஜி இந்திய விலை, விற்பனை விவரங்கள்:-

* ஐடெல் ஜெனோ (itel Zeno) 5ஜி ஸ்மார்ட்போன் அமேசான் இந்தியா வலைதளத்தில் ரூ.10,299 க்கு பட்டியலிடப்பட்டுள்ளது . ஆனால், வெளியீட்டு சலுகையின் ஒரு பகுதியாக, நீங்கள் ரூ.1000 தள்ளுபடி கூப்பனைப் பெறலாம். இது விலையை ரூ.9,299 ஆகக் குறைக்கிறது.

* 4 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி மெமரி கொண்ட ஒற்றை வேரியண்டில் ட்டுமே கிடைக்கிறது. இந்த ஸ்மார்ட்போன் கால்க்ஸ் டைட்டானியம், ஷேடோ பிளாக் மற்றும் வேவ் கிரீன் என மூன்று வண்ணங்களில் கிடைக்கிறது.

ஐடெல் ஜெனோ 5ஜி அம்சங்கள்:-

புதிய ஸ்மார்ட்போன் 120Hz ரிப்ரெஷ் ரேட் கொண்ட 6.67-இன்ச் HD+ IPS டிஸ்ப்ளே, பஞ்ச்-ஹோல் டைனமிக் பார் மற்றும் PANDA MN228 திரை பாதுகாப்பு உள்ளது. இந்த ஸ்மார்ட்போனை வாங்கிய 100 நாட்களுக்குள் டிஸ்ப்ளேவில் சேதம் ஏற்படும் பட்சத்தில், நிறுவனம் இலவசமாக திரையை மாற்றிக் கொடுப்பதாக அறிவித்துள்ளது.

புதிய ஜெனோ 5G ஸ்மார்ட்போன் MediaTek Dimensity 6300 சிப் கொண்டுள்ளது. இது 6nm முறையில் உருவாக்கப்பட்டு இருக்கிறது. இதில் 4 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி மெமரி வழங்கப்பட்டு இருக்கிறது.

புகைப்படங்களை எடுக்க இந்த ஸ்மார்ட்போன் 50MP பிரைமரி கேமரா, 8MP செல்ஃபி கேமரா உள்ளது. இந்த ஸ்மார்ட்போன் 10W சார்ஜிங் உடன் 5,000mAh பேட்டரி கொண்டிருக்கிறது.

இந்த ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 14 சார்ந்த ஓஎஸ், 4 ஜிபி விர்ச்சுவல் ரேம், IP54 வாட்டர் மற்றும் டஸ்ட் ரெசிஸ்டண்ட் வசதி கொண்டுள்ளது.

 

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular