Tuesday, February 3, 2026
HomeMain NewsOther Countryபுட்டினுக்கு நெருக்கடியை ஏற்படுத்து ஐரோப்பிய ஒன்றியத்தின் அதிரடி நடவடிக்கை

புட்டினுக்கு நெருக்கடியை ஏற்படுத்து ஐரோப்பிய ஒன்றியத்தின் அதிரடி நடவடிக்கை

புட்டினுக்கு நெருக்கடியை ஏற்படுத்தும் வகையில் ஐரோப்பிய ஒன்றியம் ரஷ்யா மீது கூடுதல் தடைகளை விதித்துள்ளது.

உக்ரேன் மீது அன்றாடம் நடத்தப்படும் தாக்குதல்கள் அமைதி வழியில் செல்ல மொஸ்கோ விரும்பவில்லை என்பதைக் காட்டுவதாக ஐரோப்பிய ஒன்றியம் தெரிவித்துள்ளது.

அமைதியை எட்டுவது ரஷ்யாவின் இலக்கு அல்லவென்று ஐரோப்பிய ஒன்றியத்தின் தலைவர் உர்சுலா வொன் டெர் லெயென் குறிப்பிட்டார்.

பலத்தைக் கொண்டு பணியவைக்க ரஷ்யா எண்ணுவதால் அதன் மீதான நெருக்குதலை அதிகரிக்க வேண்டியிருப்பதாக அவர் குறிப்பிட்டார்.

எண்ணெய், எரிசக்தி ஆகியவற்றின் உற்பத்தியிலிருந்து மொஸ்கோவிற்குக் கிடைக்கும் வருமானத்தைக் குறைக்கும் வகையில் புதிய தடைகள் உருவாக்கப்பட்டுள்ளன.

உக்ரேனிய ஜனாதிபதி வொலொடிமிர் ஜெலென்ஸ்கி ஒன்றியத்தின் நடவடிக்கையைப் பாராட்டியுள்ளார்.

சண்டைநிறுத்தத்திற்கு ரஷ்யாவை இணங்கவைக்க அது முக்கியமான படி என அவர் குறிப்பிட்டுள்ளார்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular