Monday, February 2, 2026
HomeMain NewsSri LankaA9 வீதியில் வாகன விபத்து - ஒருவர் பலி

A9 வீதியில் வாகன விபத்து – ஒருவர் பலி

கண்டி-யாழ்ப்பாணம் A9 வீதியின் கட்டுகஸ்தோட்டை நகரில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

அனுராதபுரத்தில் இருந்து கண்டி நோக்கி பயணித்த பேருந்து ஒன்று வீதியை விட்டு விலகி வீதியோரத்தில் நிறுத்தப்பட்டிருந்த முச்சக்கரவண்டி மற்றும் மோட்டார் சைக்கிளில் மோதி விபத்துக்குள்ளானது.

விபத்தில் பலத்த காயமடைந்த முச்சக்கர வண்டி சாரதி கண்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்தார்.

சம்பவத்தில் 58 வயதுடைய பரகொட, அலுதெணிய பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவரே உயிரிழந்தார்.

சடலம் கண்டி வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது. விபத்து தொடர்பில் 41 வயதுடைய பேருந்தின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கட்டுகஸ்தோட்டை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular