Monday, February 2, 2026
HomeSportsஉலக டெஸ்ட் செம்பியன்ஷிப் வென்றது தென்னாப்பிரிக்கா

உலக டெஸ்ட் செம்பியன்ஷிப் வென்றது தென்னாப்பிரிக்கா

சர்வதேச கிரிக்கெட் பேரவையின் 2023/2025 ஆம் ஆண்டுக்கான உலக டெஸ்ட் செம்பியன்ஷிப் கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில் அவுஸ்திரேலிய அணியை வீழ்த்தி தென்னாபிரிக்கா அணி கிண்ணத்தை வென்றுள்ளது.

இங்கிலாந்தின் லோட்ஸ் மைதானத்தில் கடந்த நான்கு நாட்களாக இடம்பெற்று வந்த இந்த போட்டியின் முதல் இன்னிங்ஸில், அவுஸ்திரேலியா அணி ஆதிக்கம் செலுத்தியது.

இதன்படி அவுஸ்திரேலிய அணி அதன் முதல் இன்னிங்ஸில் 212 ஓட்டங்களை பெற்றிருந்தது.

பதிலுக்கு தமது முதலாவது இன்னிங்ஸிற்காக துடுப்பெடுத்தாடிய தென்னாப்பிரிக்க அணி 138 ஓட்டங்களை மாத்திரமே பெற்றிருந்தது.

இதனையடுத்து இரண்டாம் இன்னிங்ஸில் அவுஸ்திரேலியா அணி 207 ஓட்டங்களை பெற்றுக்கொள்ள, தென்னாப்பிரிக்க அணிக்கு 282 ஓட்டங்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.

இந்தநிலையில் இரண்டாவது இன்னிங்ஸிற்காக துடுப்பெடுத்தாடிய தென்னாப்பிரிகக அணி 5 விக்கெட்டுகளை இழந்த நிலையில் வெற்றி இலக்கை கடந்தது.

துடுப்பாட்டத்தில் தென்னாப்பிரிக்க அணியின் சார்பில் எய்டன் மார்க்ரம் (Aiden Markram) 136 ஓட்டங்களை அதிகபட்சமாக பெற்றுக்கொடுத்தார்.

இதற்கமைய 2023/25 ஆம் ஆண்டுக்கான சர்வதேச கிரிக்கெட் பேரவையின் டெஸ்ட் செம்பியன்ஷிபை தென்னாப்பிரிக்க அணி முதற்தடவையாக சுவீகரித்துக் கொண்டது.

 

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular