Monday, February 2, 2026
HomeMain NewsSri Lankaதொடருந்து கட்டுப்பாட்டாளர்கள் 48 மணி நேர பணிப்புறக்கணிப்பில் ஈடுபடத் தீர்மானம்...!

தொடருந்து கட்டுப்பாட்டாளர்கள் 48 மணி நேர பணிப்புறக்கணிப்பில் ஈடுபடத் தீர்மானம்…!

தொடருந்து கட்டுப்பாட்டாளர்கள் எதிர்வரும் வெள்ளிக்கிழமை (20) நள்ளிரவு முதல், 48 மணி நேர பணிப்புறக்கணிப்பில் ஈடுபடத் தீர்மானித்துள்ளனர்.

நீண்டகாலமாகத் தீர்க்கப்படாத நிர்வாக பிரச்சனைகளை அடிப்படையாகக் கொண்டு பணிப்புறக்கணிப்பில் ஈடுபடத் தீர்மானித்துள்ளதாக, தொடருந்து கட்டுப்பாட்டாளர்கள் சங்கம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

அந்த அறிக்கையில் முன்வைக்கப்பட்டுள்ள கோரிக்கைகளாவன,

மாவட்ட போக்குவரத்து பரிசோதகர், போக்குவரத்து/வர்த்தக பதவிக்கான ஆட்சேர்ப்பில் தாமதம்,

கட்டுப்பாட்டாளர்களின் பதவி உயர்வில் தாமதம்,

விசேட தர நிலையை உடைய கட்டுப்பாட்டாளர்களின் வேதனைப் பிரச்சினை தீர்க்கப்படாமை,

திணைக்கள பரிசோதனைகளை நடத்துவதில் உள்ள தாமதம்,

செயல்திறன் நிவாரணங்களை வழங்குவதில் ஏற்பட்டுள்ள தாமதம்,

அலுவலக சேவைகளுக்காக ஊழியர்களை இணைக்காமை,

நலன்புரி நடவடிக்கைகள் தொடர்பான கோரிக்கைகள் நிறைவேற்றப்படாமை,

இலங்கை தொழில்நுட்ப சேவைக்காக மீள வழங்கப்பட்டுள்ள பதவி உயர்வு ஒழுங்கு முறையை, மீண்டும் கட்டுப்பாட்டாளர்கள் பதவிக்காகச் செயற்படுத்துவதற்கு அனுமதி கோருதல்,

இலங்கை நிர்வாக சேவைக்கு விண்ணப்பிக்க மற்றொரு வாய்ப்பு வழங்கப்படல்.

போன்ற கோரிக்கைகளை முன்வைத்து, தொடருந்து கட்டுப்பாட்டாளர்கள் இந்த பணிப்புறக்கணிப்பில் ஈடுபடத் தீர்மானித்துள்ளனர்.

 

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular