Monday, February 2, 2026
HomeMain NewsSri Lankaபௌத்த மத பிக்குனிகள் தொடர்பில் உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு..!

பௌத்த மத பிக்குனிகள் தொடர்பில் உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு..!

பௌத்த மத பிக்குனிகள் தொடர்பில் இலங்கையின் உயர்நீதிமன்றம் வரலாற்றுத் தீர்ப்பு ஒன்றை வழங்கியுள்ளது.

இந்த தீர்ப்பு நேற்று, உயர்நீதிமன்றின் பெரும்பான்மை முடிவின் மூலம் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, ஒரு பௌத்த பிக்குனிக்கு “சில் மாதா” என்பதற்குப் பதிலாக ஒரு பிக்குனி என்ற அந்தஸ்தை உயர்நீதிமன்றம் அங்கீகரித்துள்ளது.

அத்துடன், அவர்களுக்குத் தேசிய அடையாள அட்டைகளை வழங்குமாறும் உயர்நீதிமன்றம், ஆட்பதிவு திணைக்கள ஆணையாளருக்கு உத்தரவிட்டுள்ளது.

முன்னதாக, தம்புள்ளையில் உள்ள விஹாரையின் தலைமைப் பிக்குவின் சரிபார்ப்பைப் பெறாமல், ஆட்பதிவு திணைக்கள ஆணையாளர், பிக்குனி என்ற பெயரைத் தேசிய அடையாள அட்டையில் சேர்க்க மறுத்தமைக்கு எதிராகப் பிக்குனி ஒருவரால் தாக்கல் செய்யப்பட்ட மனுவின் அடிப்படையிலேயே உயர்நீதிமன்றின் இந்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

 

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular