உக்ரைனின் தலைநகர் கிவ் மீது ரஷ்யா மேற்கொண்ட தாக்குதலில் குறைந்தது 15 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
அத்துடன், இந்த தாக்குதலில் பலர் காயமடைந்துள்ளதாக, சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
உக்ரைன் மீதான ரஷ்யாவின் தாக்குதல் ஆரம்பிக்கப்பட்டதிலிருந்து, தலைநகர் கிவ் மீது நடத்தப்பட்ட மிகப்பெரிய தாக்குதல் இதுவெனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த தாக்குதலுக்கு 440 ஆளில்லா விமானங்கள் மற்றும் 32 ஏவுகணைகள் பயன்படுத்தப்பட்டதாக, உக்ரைனின் உள்துறை அமைச்சு தெரிவித்துள்ளது.
