Monday, February 2, 2026
HomeMain NewsSri Lankaகற்பிட்டியில் வாகன விபத்து - ஒருவர் பலி

கற்பிட்டியில் வாகன விபத்து – ஒருவர் பலி

கற்பிட்டி, கல்குடாவ வீதியில் நேற்று (18) இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்தார்.

உந்துருளி ஒன்று ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து, வீதியை விட்டு விலகி வீடொன்றின் தடுப்புச் சுவர் மீது மோதி விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் பலத்த காயமடைந்த உந்துருளி ஓட்டுநர், கற்பிட்டி மருத்துவமனையில் அனுமதித்த பின்னர் உயிரிழந்தார்.

சம்பவத்தில் 20 வயதுடைய தலவில பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவரே உயிரிழந்ததாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

குறித்த விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை கற்பிட்டி காவல்துறையினர் முன்னெடுத்துள்ளனர்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular