Monday, February 2, 2026
HomeMain NewsSri Lankaபோலி கடவுச்சீட்டுகளைப் பயன்படுத்தி இந்தியாவுக்குள் நுழைந்த இலங்கையர் இருவர் கைது!

போலி கடவுச்சீட்டுகளைப் பயன்படுத்தி இந்தியாவுக்குள் நுழைந்த இலங்கையர் இருவர் கைது!

போலியான இந்திய கடவுச்சீட்டுகளைப் பயன்படுத்தி இந்தியாவுக்குள் நுழைந்ததாகக் கூறப்படும் இலங்கையைச் சேர்ந்த ஒரு தாயும் மகளும் சென்னையில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கடந்த திங்களன்று அவர்கள் சென்னையை அடைந்த நிலையில், இந்திய குடிவரவு மற்றும் குடியகல்வு அதிகாரிகள் ஆவணங்களை ஆய்வு செய்துள்ளனர்.

இதன்போது, 48 வயது பெண்ணும் அவரது 21 வயது மகளும் சென்னை முகவரியுடன் கூடிய இந்தியக் கடவுச்சீட்டுக்களை வைத்திருப்பது கண்டறியப்பட்டது.

இந்தநிலையில், சுற்றுலா விசாவில் இலங்கைக்குச் சென்றதாகக் கூறிய இருவரும் விசாரணைக்காகத் தடுத்து வைக்கப்பட்டனர்.

இதனைத் தொடர்ந்து இருவரும் இலங்கையைச் சேர்ந்தவர்கள் என்பதும், கடந்த சில ஆண்டுகளாகச் சென்னையில் சட்டவிரோதமாகத் தங்கியிருந்ததும் உறுதி செய்யப்பட்டது.

அத்துடன், இந்தியாவில் அடையாளச் சான்றுகளைப்பெற அவர்கள் போலி ஆவணங்களைப் பயன்படுத்தியுள்ளனர் என்பதும் விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது.

 

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular