Monday, February 2, 2026
HomeCinemaசோல் ஆஃப் மார்கன்..! நாளை மாலை வெளியாகிறது

சோல் ஆஃப் மார்கன்..! நாளை மாலை வெளியாகிறது

மீரா விஜய் ஆண்டனி தயாரிப்பில், லியோ ஜான் பால் இயக்கும் `மார்கன்’ படத்தில் விஜய் ஆண்டனி நடித்துள்ளார் .

அட்டக்கத்தி, பீட்சா, சூது கவ்வும், இன்று நேற்று நாளை , தெகிடி, முண்டாசுப்பட்டி, காதலும் கடந்து போகும், ஏ1, மாயவன் போன்ற திரைப்படங்களை எடிட் செய்தவர் படத்தொகுப்பாளர் லியோ ஜான் பால்.

மார்கன் படத்தில் விஜய் ஆண்டனி, உயர் காவல் அதிகாரியாக நடித்திருக்கிறார். ககன மார்கன் என்றால், சித்தர்களின் அகராதியில் ‘காற்றின் வழி பயணிப்பவன்’ என்று பொருள்.

விஜய் ஆண்டனி இந்தப் படத்திற்கு இசை அமைத்துள்ளார். படத்தின் வில்லனாக நடித்து இருக்கும் அஜய் தீஷன் இப்படத்தின் மூலம் அறிமுகமாகிறார். இப்படம் ஒரு ஃபேண்டசி கலந்த கிரைம் திரைப்படமாக உருவாகியுள்ளது.

படத்தின் டிரெய்லருக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. திரைப்படம் வரும் ஜூன் 27 ஆம் தேதி வெளியாகிறது.

மேலும், மார்கன் படத்திற்கு தணிக்கை குழு யு/ஏ சான்றிதழ் வழங்கியுள்ளதாக படக்குழு போஸ்டர் வௌியிட்டு அறிவித்துள்ளது.

இந்நிலையில், ககன மார்கன் படத்தின் சிங்கிளான “சோல் ஆப் மார்கன்” நாளை மாலை 5 மணிக்கு வெளியாவதாக படக்குழு அறிவித்துள்ளது.

 

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular