Monday, February 2, 2026
HomeCinemaகூலி திரைப்படத்தின் பெயர் மா‌ற்ற‌ம்

கூலி திரைப்படத்தின் பெயர் மா‌ற்ற‌ம்

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் திரைப்படம் கூலி. இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க அனிருத் இசையமைக்கிறார்.

நாகர்ஜுனா, உபேந்திரா, ஸ்ருதி ஹாசன், சத்யராஜ், சோபின் ஷபீர் ஆகியோர் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். பூஜா ஹெக்டே ஒரே ஒரு பாடலுக்கு சிறப்பு நடனம் ஆடியுள்ளார். மேலும் அமீர் கான் இப்படத்தில் கேமியோ ரோலில் நடித்துள்ளார் என்பதும் உறுதி செய்யப்பட்டுள்ளது.

வருகிற ஆகஸ்ட் மாதம் ரிலீஸாகும் கூலி,கண்டிப்பாக உலகளவில் ரூ. 1000 கோடி வசூல் செய்து சாதனை படைக்கும் என ரசிகர்களால் எதிர்பார்க்கப்படுகிறது.

பான் இந்தியா திரைப்படமாக வெளிவரவிருக்கும் கூலி திரைப்படத்திற்கு ஹிந்தியில் ‘Majadoor’ என தலைப்பு வைத்துள்ளனர். இது ரசிகர்களுக்கு கடும் வருத்தத்தை தந்துள்ளது. ஏன் கூலி என்கிற தலைப்பை ஹிந்தியில் மாற்றவேண்டும் என கேள்வி எழுப்பி வருகின்றனர்.

ஏற்கனவே 1983ம் ஆண்டு அமிதாப் பச்சன் நடிப்பில் கூலி எனும் படம் ஹிந்தியில் வெளியாகியுள்ளது. மேலும் கடந்த 2020ம் வருண் தவான் நடிப்பில் கூலி நம்பர் 1 எனும் தலைப்பில் படம் வெளிவந்தது.

இதனால்தான் ரஜினியின் கூலி படத்தின் ஹிந்தி தலைப்பை மாற்றியுள்ளதாக சொல்லப்படுகிறது. ஆனால், ‘Majadoor’ என்கிற தலைப்பு ரசிகர்களுக்கு பிடிக்கவில்லை என்பதால் கண்டிப்பாக, இந்த தலைப்பு மாற்றப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular