தெலுங்கு, தமிழ், ஹிந்தி ஆகிய திரைப்படங்களில் முன்னணி நடிகையாக வலம் வருகிறார் ராஷ்மிகா மந்தனா.
சமீபத்தில் சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ், நாகார்ஜுனா நடிப்பில் குபேரா வெளியாகி, இதுவரையில் ரூ.100 கோடிக்கும் அதிகமான வசூல் பெற்றதாக அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இந்நிலையில், நடிகை ராஷ்மிகா மந்தனாவின் “மைசா” என்ற புதிய படத்தின் முதல் பார்வை போஸ்டர் வெளியாகியுள்ளது.
நேற்று வெளியான போஸ்டரில், காட்டுப் பகுதியில் கையில் ஈட்டியுடன் சண்டையிடப் போவது போன்று ரஷ்மிகா நிற்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.
இந்தக் கதைக்களமானது, கதாநாயகியை மையமாக வைத்து உருவாக்கப்பட்டிருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.
புதிய தயாரிப்பு நிறுவனமான ஃபார்முலா ஃபிலிம்ஸ் தயாரிப்பில், அறிமுக இயக்குநர் ரவீந்திரா புல்லே இயக்கத்தில் இந்த திரைப்படம் உருவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
