Monday, February 2, 2026
HomeMain NewsSri Lankaகச்சதீவு தாரைவார்ப்பு தீர்மானம் தவறானது - இராமலிங்கம் சந்திரசேகர்

கச்சதீவு தாரைவார்ப்பு தீர்மானம் தவறானது – இராமலிங்கம் சந்திரசேகர்

இலங்கைக்கு சொந்தமான கச்சதீவானது, இங்குள்ள 2 கோடி மக்களின் இறைமை எனவும் அதனை எவராலும் மீளப்பறிக்க முடியாது எனவும் கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.

அண்மையில் இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர், கச்சதீவு இலங்கைக்குக் கொடுக்கப்பட்டது முதல், கடற்றொழிலாளர்களின் கைதுகள் அதிகரித்து வருவதாகவும், கச்சதீவு தாரைவார்ப்பு தொடர்பான தீர்மானம் தவறானது எனவும் பொருள்படும் வகையில் கருத்து தெரிவித்திருந்தார்.

இது குறித்து ஊடக சந்திப்பொன்றில் கருத்து வெளியிடும்போது, அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

எனவே, சர்வதேச சட்டங்களுக்கு அமைவாகவும், சர்வதேச ரீதியில் அங்கீகரிக்கப்பட்ட நிலையிலேயே இலங்கையிடம் கச்சதீவு ஒப்படைக்கப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

 

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular