Monday, February 2, 2026
HomeMain NewsEuropeஐரோப்பிய நாடுகளுக்கு விடுக்கப்பட்டுள்ள வானிலை எச்சரிக்கைகள்

ஐரோப்பிய நாடுகளுக்கு விடுக்கப்பட்டுள்ள வானிலை எச்சரிக்கைகள்

தெற்கு ஐரோப்பிய நாடுகள் பலவற்றில் வெப்பநிலை 40 பாகை செல்சியஸை எட்டியுள்ளமையினால் சுகாதார மற்றும் காட்டுத் தீ தொடர்பான எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளன.

அதன்படி, இத்தாலி, கிரேக்கம், பிரான்ஸ், ஸ்பெயின் மற்றும் போர்த்துகல் ஆகிய நாடுகள் மிக மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஸ்பெயினின் செவில்லே பகுதியில் இன்றைய தினம் வெப்பநிலை 42 பாகை செல்சியஸை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த வெப்ப அலை, ஜூன் மாத இறுதியில் மிகவும் தீவிரமாக இருக்கும் எனவும், பொதுவாக ஜூலை நடுப்பகுதி அல்லது ஒகஸ்ட் மாதத்தில் உச்ச நிலையை எட்டும் எனவும் ஐரோப்பிய வானிலை எதிர்வு கூறல்கள் தெரிவிக்கின்றன.

இதேவேளை, இத்தாலியில், ரோம், மிலன் மற்றும் வெனிஸ் போன்ற நகரங்களில் வசிப்பவர்கள் முற்பகல் 11 மணி முதல் மாலை 6 மணி வரை வீடுகளுக்குள்ளேயே இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

இதற்கிடையில், இங்கிலாந்தின் சில பகுதிகள் மஞ்சள் மற்றும் அம்பர் வானிலை எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளன.

திங்கட்கிழமை லண்டனில் வெப்பநிலை 35 பாகை செல்சியஸை எட்டக்கூடும் எனவும் வெப்ப அலை செவ்வாய் வரை நீடிக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

 

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular