டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் 200 விக்கெட்டுகளை வீழ்த்திய முதல் தென்னாப்பிரிக்க சுழற்பந்து வீச்சாளர் என்ற சாதனையை கேசவ் மஹாராஜ் படைத்துள்ளார்.
சிம்பாப்வே அணிக்கெதிரான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் அவர் குறித்த மைல்கல்லை எட்டினார்.
கேசவ் மஹாராஜ் 59 டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடியுள்ள நிலையில், 200 விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ளார்.
