பிரித்தானிய பயணிகளுக்கு பாஸ்போர்ட் எச்சரிக்கை : 10 ஆண்டு கடந்தால் அனுமதி இல்லை..!

பிரித்தானியா வெளியேறிய பின் (Brexit), ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுக்குப் பயணிக்க புதிய விதிமுறைகள் அமுலாகி உள்ளன.

இதன் காரணமாக, தற்போது ஒரு முக்கியமான பாஸ்போர்ட் எச்சரிக்கையை பிரித்தானிய பயணிகள் கவனிக்க வேண்டும்.

The Independent பத்திரிகையின் பயண நிருபர் சைமன் கால்டர், “பிரித்தானியாவில் பாஸ்போர்ட்கள் 10 ஆண்டுகளுக்கும் மேலாக நீட்டிக்கப்படலாம்.

ஆனால் நீங்கள் யூரோப்பிய ஒன்றிய (EU) நாடுகளுக்குள் செல்ல முயற்சிக்கிறீர்கள் என்றால், உங்கள் பாஸ்போர்ட் 10 ஆண்டுகளைக் கடந்திருந்தால் அனுமதிக்கப்பட மாட்டீர்கள்” என்று தெரிவித்துள்ளார்.

அதாவது, உங்கள் பாஸ்போர்ட் 10 ஆண்டுகடந்திருந்தால் EU நுழைவு நிராகரிக்கப்படும்.

மேலும், நீங்கள் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளைவிட்டு திரும்பும் மூன்று மாதங்களுக்கு முன் பாஸ்போர்ட் செல்லுபடியாக இருக்க வேண்டும்.

இந்த எச்சரிக்கையை புறக்கணித்தால், விமான நிலையத்தில் நுழைய கூட முடியாமல் விடுமுறை திட்டம் முழுமையாக கெட்டுப்போகும் அபாயம் உள்ளது.

ஆகவே, யாரும் இத்தகைய தவறை செய்யாமல், பாஸ்போர்ட் செல்லுபடிக்கு முன்கூட்டியே சரிபார்த்துக் கொள்ளவும், தேவைப்பட்டால் புதியது பெற்று பயணிக்கவும் எச்சரிக்கை வழங்கப்பட்டுள்ளது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles