Monday, February 2, 2026
HomeSportsஇந்தியாவுக்கு எதிரான 2-வது டெஸ்ட்: ஆடும் லெவனை அறிவித்த இங்கிலாந்து அணி

இந்தியாவுக்கு எதிரான 2-வது டெஸ்ட்: ஆடும் லெவனை அறிவித்த இங்கிலாந்து அணி

இங்கிலாந்து- இந்தியா அணிகள் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்றது. இதன்மூலம் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 1-0 என்ற கணக்கில் இங்கிலாந்து அணி முன்னிலையில் உள்ளது.

இதனை தொடர்ந்து இரு அணிகளுக்கு இடையேயான 2-வது டெஸ்ட் போட்டி ஜூலை 2-ந் தேதி தொடங்குகிறது. இந்நிலையில் 2-வது டெஸ்ட் போட்டிக்கான ஆடும் லெவனை இங்கிலாந்து அணி அறிவித்துள்ளது. அதன்படி முதல் போட்டியில் விளையாடிய வீரர்களுடன் இங்கிலாந்து அணி களமிறங்க உள்ளது.

அந்த அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஆர்ச்சர் அந்த அணியில் இடம் பிடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் குடும்ப சூழ்நிலை காரணமாக அவர் விலகியுள்ளார்.

இந்தியாவுக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டிக்கான இங்கிலாந்தின் ஆடும் லெவன்:-

ஜாக் கிராலி, பென் டக்கெட், ஓலி போப், ஜோ ரூட், ஹாரி புரூக், பென் ஸ்டோக்ஸ் (கேப்டன்), ஜேமி ஸ்மித் (வார), கிறிஸ் வோக்ஸ், பிரைடன் கார்ஸ், ஜோஷ் டோங், ஷோயப் பஷீர்.

 

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular