Monday, February 2, 2026
HomeMain NewsUKபிரித்தானியாவில் கடுமையாகும் விதிகள்..!

பிரித்தானியாவில் கடுமையாகும் விதிகள்..!

பிரித்தானியாவில் முன்பு ஆட்சி செய்த, ரிஷி சுனக் தலைமையிலான கன்சர்வேட்டிவ் கட்சி, திறன்மிகுப் பணியாளர்கள் விசாவில் பிரித்தானியா வருபவர்களுக்கான குறைந்தபட்ச வருமான வரம்பை, 26,200 பவுண்டுகளில் இருந்து 38,700 பவுண்டுகளாக உயர்த்தியது.

அதற்குப் பின் ஆட்சிப் பொறுப்பேற்றுள்ள கெய்ர் ஸ்டார்மர் தலைமையிலான லேபர் அரசோ, நிலைமையை மேலும் கடினமாக்க உள்ளது.

ஆம், திறன்மிகுப் பணியாளர்கள் விசாவில் பிரித்தானியா வருபவர்களுக்கான (skilled workers) குறைந்தபட்ச வருமான வரம்பை, 38,700 பவுண்டுகளில் இருந்து 41,700 பவுண்டுகளாக உயர்த்த உள்ளது ஸ்டார்மர் அரசு.

அப்படியானால், புதிய விதிகளின்படி, 111 வகையான பணி செய்பவர்கள் இனி பிரித்தானியாவுக்கு வேலைக்கு வர முடியாது.

அதுவும், இந்த விதிகள் இம்மாதம், அதாவது, ஜூலை மாதம் 22ஆம் திகதியே அமுல்படுத்தப்பட உள்ளன.

மேலும், இனி பிரித்தானியாவில் care worker வேலை செய்வதற்கு வெளிநாட்டவர்களை வேலைக்கு எடுப்பதில்லை என்றும் அரசு முடிவு செய்துள்ளது.

அத்துடன், 2026ஆம் ஆண்டின் இறுதியில், பட்டப்படிப்பு படிக்காதவர்களுக்கான வேலைகள் செய்பவர்கள் தங்கள் குடும்பத்தினரை பிரித்தானியாவுக்கு அழைத்துவர முடியாது என்றும் விதி அமுலுக்கு வர உள்ளது.

புலம்பெயர்தலைக் கட்டுப்படுத்துவதற்காக என்று கூறி இந்த நடவடிக்கைகளை மேற்கொள்கிறது பிரித்தானிய அரசு.

ஆனால், ஏற்கனவே care workerகளுக்கான பணியிடங்கள் 130,000 காலியாக உள்ளன.

இந்நிலையில், வெளிநாட்டவர்களை care worker வேலை செய்வதற்கு அனுமதிக்கவில்லையென்றால், நிலைமை படு மோசமாகிவிடும் என எச்சரிக்கிறார்கள் துறை சார்ந்தவர்கள்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular