Monday, February 2, 2026
HomeMain NewsSri Lankaஇந்தியாவில் கைது செய்யப்பட்ட இலங்கையர்கள் நாடு கடத்தல்

இந்தியாவில் கைது செய்யப்பட்ட இலங்கையர்கள் நாடு கடத்தல்

இலங்கையில் பல்வேறு குற்றங்களுக்காகத் தேடப்படும் நிலையில், இந்தியாவில் கைது செய்யப்பட்ட மூவர் நாடு கடத்தப்படவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

அவர்கள் நேற்று கட்டுநாயக்க விமான நிலையத்துக்கு அழைத்து வரப்படுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

எனினும், எவரும் நேற்று அழைத்து வரப்படவில்லை என்று காவல்துறையின் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

அதேநேரம், குறித்த மூவரும் எப்போது இந்தியாவுக்கு சென்றவர்கள் என்ற தகவல் வெளியாகவில்லை.

முன்னதாக கடந்த வாரமும் இரண்டு சிங்களவர்கள் மற்றும் ஒரு தமிழர் ஆகியோர், தமிழகம் தனுஸ்கோடி கரைக்குப் படகு மூலம் சென்றபோது கைது செய்யப்பட்டிருந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

 

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular