Tuesday, February 3, 2026
HomeMain NewsSri Lankaஇன்றைய வானிலை முன்னறிவிப்பு

இன்றைய வானிலை முன்னறிவிப்பு

இன்றைய வானிலை முன்னறிவிப்பு

நாட்டின் சில இடங்களில் இன்று (13) அவ்வப்போது மழை பெய்யக்கூடுமென, வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

அந்தவகையில், மேல், சப்ரகமுவ மாகாணங்களிலும், நுவரெலியா, கண்டி, காலி, மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யக்கூடுமென அந்த திணைக்களம் தெரிவித்துள்ளது.

ஊவா, கிழக்கு மாகாணங்களில், மாலை அல்லது இரவு வேளைகளில் சில இடங்களில், மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.

மேலும், மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுகளிலும், மேல், சப்ரகமுவ, தென், வடமேல் மற்றும் வடமத்திய மாகாணங்களிலும், அவ்வப்போது மணிக்கு 40-50 கிலோமீற்றர் வேகத்தில் காற்று வீசக்கூடும்.

இதேவேளை, இடியுடன் கூடிய மழை பெய்யும் சந்தர்ப்பங்களிலும், தற்காலிக பலத்த காற்று ஏற்படும் வேளைகளிலும், அனர்த்தங்களைக் குறைப்பதற்குத் தேவையான பாதுகாப்பு முன்னாயத்த நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு வளிமண்டலவியல் திணைக்களம் பொது மக்களை அறிவுறுத்தியுள்ளது.

Weather, Toady Weather, Weather Report

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular