தமிழகத்தின் மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி மற்றும் பத்மாவதி தம்பதியருக்கு மூத்த மகனாக பிறந்தவர் மு.க. முத்து.
இந்நிலையில், கடந்த சில நாட்களாக கடுமையாக உடல்நலம் பாதிக்கப்பட்டு இருந்த அவர், இன்று காலை 8 மணியளவில் காலமானார். அவருக்கு வயது 77.
சென்னை ஈச்சம்பாக்கத்தில் அவருடைய உடல் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு உள்ளது.
அணையா விளக்கு, பூக்காரி, பிள்ளையோ பிள்ளை உள்ளிட்ட பல்வேறு படங்களில் நடித்துள்ளார்.
அவருடைய உடலுக்கு அஞ்சலி செலுத்த முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் நேரில் செல்கிறார்.
மு.க. முத்துவின் மறைவை அவருடைய மனைவி சிவகாம சுந்தரி இதனை உறுதிப்படுத்தி உள்ளார்.
இதனையடுத்து, தி.மு.க.வில் இன்று முக்கிய நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டு உள்ளன.
