Monday, February 2, 2026
HomeMain NewsIndiaஓடுபாதையிலிருந்து விலகிச் சென்ற ‘ஏர் இந்தியா’ விமானம்: பெரும் விபத்து தவிர்ப்பு

ஓடுபாதையிலிருந்து விலகிச் சென்ற ‘ஏர் இந்தியா’ விமானம்: பெரும் விபத்து தவிர்ப்பு

ஏர் இந்தியா நிறுவனத்துக்கு சொந்தமான விமானமொன்று மும்பை சத்ரபதி சிவாஜி மகாராஜ் சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்கியபோது ஓடுபாதையிலிருந்து விலகிச் சென்றுள்ளது.

ஓடுபாதை மழையால் நனைந்திருந்தமையினால், தரையிறங்கிய விமானம் விலகிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த விபத்தில், விமானத்தின் பின்புறமும் ஒரு இயந்திரமும் சேதமடைந்துள்ளதாக ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

அத்துடன், ஓடுபாதையும் பகுதியளவில் சேதமடைந்துள்ளது.

எவ்வாறாயினும், விமானத்தில் இருந்த அனைத்து பயணிகளும் பாதுகாப்பாக உள்ளனர் என விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர்.

கொச்சியிலிருந்து புறப்பட்டுவந்து, இன்று காலை 09.27 அளவில் மும்பை சத்ரபதி சிவாஜி மகாராஜ் சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்கிய விமானமொன்றே இவ்வாறு ஓடுபாதையிலிருந்து விலகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular