தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் மீதும், அக்கட்சித் தொண்டர்கள் மீதும் வைஷ்ணவி என்ற பெண் முறைப்பாடளித்துள்ளார்.
இவர் அண்மையில் தமிழக வெற்றிக் கழகத்திலிருந்து விலகி, திமுகவில் இணைந்துகொண்டார்.
இந்தநிலையில் தன்னை பற்றி அவதூறான கருத்துக்களைப் பரப்பி வருவதாகக் குறித்த பெண் குற்றஞ்சாட்டியுள்ளார்.
மேலும் இது தொடர்பில் அக்கட்சியின் தலைவர் விஜய், தனது தொண்டர்களுக்கு வாய்மொழி மூலமாகவோ அல்லது எழுத்து வடிவமாகவோ அறிக்கை வெளியிடுவார் எனத் தாம் எதிர்பார்த்ததாகவும் குறித்த பெண் குறிப்பிட்டுள்ளார்.
இதனால் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் மீதும், அக்கட்சித் தொண்டர்கள் மீதும் முறைப்பாடளித்துள்ளதாக வைஷ்ணவி குறிப்பிட்டுள்ளார்.
