ஒவ்வொரு நாடுகளுக்கும் விசா இல்லாமல் பயணிக்கக் கூடிய இடங்களைக் கருத்தில் கொண்டு “தி ஹென்லி” தரவரிசைப் பட்டியலில் இலங்கை 91 ஆவது இடத்தைப் பிடித்துள்ளது.
முன்னதாக கடந்த ஆண்டு வெளியான பட்டியலில் 96ஆவது இடத்தை பிடித்திருந்த நிலையில், இந்த ஆண்டு 91 ஆவது இடத்துக்கு முன்னேறியுள்ளது.
குறித்த பட்டியலில் முதலிடத்தைப் பிடித்து, உலகின் மிகவும் சக்தி வாய்ந்த கடவுச்சீட்டைக் கொண்ட நாடாக சிங்கப்பூர் உள்ளது.
தென்கிழக்கு ஆசிய நாடான சிங்கப்பூர், 193 நாடுகளுக்கு விசா இல்லாமல் பயணிக்க அனுமதிக்கின்றது.
இந்தப் பட்டியலில் ஜப்பான் மற்றும் தென் கொரியா இரண்டாவது இடத்திலும், டென்மார்க், பின்லாந்து, பிரான்ஸ், ஜேர்மன், அயர்லாந்து, இத்தாலி மற்றும் ஸ்பெய்ன் ஆகிய நாடுகள் மூன்றாவது இடத்திலும் உள்ளன.
அத்துடன் குறித்த பட்டியலில் இறுதி இடத்தை ஆப்கானிஸ்தான் பிடித்துள்ளது.
