Monday, February 2, 2026
HomeCinemaசூர்யா பிறந்தநாளை முன்னிட்டு சிறப்பு போஸ்டரை வெளியிட்ட "சூர்யா 46" படக்குழு

சூர்யா பிறந்தநாளை முன்னிட்டு சிறப்பு போஸ்டரை வெளியிட்ட “சூர்யா 46” படக்குழு

ரெட்ரோ படத்தையடுத்து நடிகர் சூர்யா, ஆர்.ஜே. பாலாஜி இயக்கும் கருப்பு படத்தில் நடித்துள்ளார். இப்படம் சூர்யா நடிக்கும் 45-வது திரைப்படமாகும். இப்படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக திரிஷா நடித்துள்ளார்.
சூர்யா பிறந்தநாளை முன்னிட்டு வெளியான கருப்பு படத்தின் டீசர் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.
கருப்பு படத்தை தொடர்ந்து, சூர்யா 46 படத்தை தெலுங்கு இயக்குனர் வெங்கி அட்லூரி இயக்குகிறார். இப்படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக மமிதா பைஜூ நடிக்கிறார்.
இந்நிலையில், நடிகர் சூர்யாவின் பிறந்தநாளை முன்னிட்டு, ‘சூர்யா 46’ படத்தின் அப்டேட் இன்று மாலை 4.06 மணிக்கு வரும் என்று அப்படத்தின் தயாரிப்பாளர் நாக வம்சி தனது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்தார்.
அதன்படி, சூர்யாவின் பிறந்தநாளை முன்னிட்டு சிறப்பு போஸ்டரை வெளியிட்டு, பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து வெளியிட்டுள்ளது சூர்யா 46 படக்குழு. இதனால் சூர்யா ரசிகர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular