மகளிர் கோபா அமெரிக்கா சம்பியனான பிரேஸில்

தென்அமெரிக்க கண்டத்தில் நடைபெறும் மகளிருக்கான கோபா அமெரிக்கா ஃபெமெனினா உதைபந்து தொடரில் பிரேஸில் ‘பெனால்ட்டி ஷூட் அவுட்’ வாய்ப்பில் கொலம்பியாவை வீழ்த்தி ஒன்பதாவது முறையாக சம்பியன் பட்டம் வென்றது.

10ஆவது முறையாக இந்தாண்டு நடைபெற்ற தொடரில் தற்போது பிரேஸில் 9ஆவது முறையாக கிண்ணத்தை வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது. அதிலும், இந்த ஆண்டுடன் கடைசி 5 முறையும் அந்த அணியே தொடர்ந்து சம்பியன் பட்டம் வென்றுள்ளது.

ஈகுவடாரின் குய்டோ நகரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இறுதி ஆட்டத்தில் நிர்ணயிக்கப்பட்ட நேரத்தின் முடிவில் ஆட்டம் 4-4 கோல் கணக்கில் சமநிலையில் இருந்தது. பின்னர் வெற்றியாளரை தீர்மானிக்க நடத்தப்பட்ட பெனால்ட்டி ஷூட் அவுட் வாய்ப்பில் பிரேஸில் 5-4 கோல் கணக்கில் வெற்றி பெற்றது. தொடரில் அதிக கோல்கள் (6) அடித்தவர்களாக பிரேஸிலின் அமாண்டா குட்டெரெஸ் மற்றும் பராகுவேயின் கிளாடியா மார்டினெஸ் ஆகியோர் தெரிவானர்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Are you human? Please solve:Captcha


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles