Monday, February 2, 2026
HomeCinemaதமிழ்நாட்டிலும் கூலி படத்தின் டிக்கெட் முன்பதிவு தொடங்கியது- ரசிகர்கள் மகிழ்ச்சி

தமிழ்நாட்டிலும் கூலி படத்தின் டிக்கெட் முன்பதிவு தொடங்கியது- ரசிகர்கள் மகிழ்ச்சி

நடிகர் ரஜினிகாந்த் மற்றும் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் உருவாகி இருக்கும் திரைப்படம் கூலி. இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.

இந்தப் படத்தில் அமீர் கான், சத்யராஜ், நாகர்ஜுனா, சௌபின் ஷாஹிர், ஸ்ருதிஹாசன் மற்றும் உபேந்திரா ஆகியோர் நடித்துள்ளனர்.

கூலி திரைப்படம் வரும் ஆகஸ்ட் 14-ம் தேதி வெளியாகிறது.

படத்தின் டிக்கெட் முன்பதிவுகள் அமெரிக்கா மற்றும் ஓவர்சீஸ் நாடுகளில் தொடங்கி அதிரடி புக்கிங்ஸ் நடைப்பெறுகிறது. படத்தின் ப்ரீமியர் ஷோவிற்கு வட அமெரிக்கா நாட்டில் 50000 மேற்பட்ட டிக்கெட்டுகள் புக் செய்யப்பட்டுள்ளது.

கேரளாவில் இன்று டிக்கெட் முன்பதிவு தொடங்கியது. ரசிகர்கள் காலையிலேயே தியேட்டர் வாசலில் வரிசையில் நின்று அடித்து பிடித்து டிக்கெட் புக் செய்து வருகின்றனர். 1 மணி நேரத்தில் 50 ஆயிரத்திற்க்கும் மேல் டிக்கெட் புக் செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் தமிழ்நாட்டிலும் டிக்கெட் முன்பதிவு இன்று இரவு 8 மணிக்கு தொடங்கியது. ரசிகர்கள் டிக்கெட்டுகள் முன்பதிவு செய்து வருகின்றனர். இப்படம் முன்பதிவுகளில் மட்டுமே பல கோடிகள் வசூல் செய்யும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

 

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular