Monday, February 2, 2026
HomeMain NewsOther Countryபுடின் - ட்ரம்ப் உத்தேச சந்திப்பு : ஐரோப்பியத் தலைவர்கள் வரவேற்பு

புடின் – ட்ரம்ப் உத்தேச சந்திப்பு : ஐரோப்பியத் தலைவர்கள் வரவேற்பு

ரஷ்ய ஜனாதிபதி விளாடிமீர் புடினுக்கும், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பிற்கும் இடையே எதிர்வரும் 15ம் திகதி நடைபெறவுள்ள உத்தேசச் சந்திப்பினை ஐரோப்பியத் தலைவர்கள் வரவேற்றுள்ளனர்.

அதேவேளை, யுக்ரைன் யுத்தத்தை முடிவிற்குக் கொண்டு வருவது தொடர்பாக ரஷ்யாவிற்கு ராஜதந்திர ரீதியாக அழுத்தத்தை அமெரிக்கா பிரயோகிக்க வேண்டும் எனவும் அவர்கள் கோரியுள்ளனர்.

இந்தச் செயல்பாட்டின் மூலம் ஐரோப்பிய நாடுகளின் பாதுகாப்பு மற்றும் நலன்களை உறுதியாகப் பேண முடியும் எனவும் அவர்கள் குறிப்பிடப்பட்டுள்ளனர்.

இதற்கிடையில், மூன்றரை ஆண்டுகளாக நடைபெறும் யுத்தத்தினை நிறுத்தி, நிரந்தரச் சமாதானத்தை ஏற்படுத்துவதற்கான ஒப்பந்தம் ஒன்றின் அவசியத்தை யுக்ரைன் ஜனாதிபதி ஸெலன்ஸ்கி வலியுறுத்தியுள்ளார்.

 

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular