எல்லை அருகே டிரம்ப் பாதை அமைப்பதைத் தடுக்க தயாராகும் ஈரான்

ஈரான் எல்லை அருகே டிரம்ப் பாதை அமைக்கவிருப்பதை தடுக்கப்போவதாக ஈரான் அரசாங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் அஸர்பைஜானுக்கும் அர்மீனியாவுக்கும் இடையே அமைதி உடன்பாடு உருவாக உதவினார்.

உடன்பாட்டின் ஒரு பகுதியாக அஸர்பைஜானுக்கும் அதன் தன்னாட்சி வட்டாரமான Nakhchivan பகுதிக்கும் இடையே பாதை அமைக்க இணக்கம் காணப்பட்டது.

அந்த 32 கிலோமீட்டர் தூரப் பாதை ஈரானிய எல்லையில் அமைகிறது. இரு நாடுகளும் அதிபர் டிரம்ப்புக்கு அமைதிக்கான நொபெல் பரிசுக்குப் பரிந்துரை செய்யப்போவதாகக் கூறுகின்றன.

ஆனால் ஈரான் தனது எல்லைக்குப் பக்கத்தில் அந்நிய நாடுகள் வருவதை ஏற்கமுடியாது என்று கூறிவிட்டது.

(Visited 1 times, 1 visits toda

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Are you human? Please solve:Captcha


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles